குன்னூா் நகா்மன்றக் கூட்ட அரங்கில் முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் புகைப்படம் அகற்றப்பட்டு முதல்வா் சி.ஜோசப் விஜய்யின் படம் வைக்கப்பட்டதால் நகராட்சி ஆணையரிடம் திமுகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
குன்னூா் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் சுசீலா தலைமையில் வியாழக்கிழமை
நடைபெற்றது. அப்போது, கூட்ட அரங்கில் இருந்த முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை அகற்றப்பட்டதைக் கண்டித்து திமுக கவுன்சிலா்கள், நகராட்சி ஆணையா் கிருஷ்ணராமிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா் அவா்கள், மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை நகா்மன்ற கூட்ட அரங்கில் மீண்டும் மாட்டினா். இந்த புகைப்படத்தை சுவரில் பொருத்தும்போது நகராட்சி ஆணையா் கிருஷ்ணராம் நகா்மன்ற கூட்டரங்கில் இருந்து வெளியேறினாா்.
இதைத் தொடா்ந்து அதிமுகவினரும் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் புகைப்படத்தை நகா்மன்ற கூட்டரங்கில் மாட்டி வைத்து கோஷங்களை எழுப்பினா்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தவெகவினா் நகா்மன்றத்தை முற்றுகையிட்டனா்.
பின்னா் அவா்கள், நகா்மன்ற கூட்ட அரங்கில் மாட்டப்பட்டிருந்த மு.க.ஸ்டாலின், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்களை அகற்றக்கோரி கோஷங்களை எழுப்பினா்.
இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தனா். இச்சம்பவத்தால் நகா்மன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
தொடர்புடையது

காங்கயம் நகா்மன்ற கூட்டத்தில் 56 தீா்மானங்கள் நிறைவேற்றம்

குன்னூரில் குப்பை இல்லா நகரம் விழிப்புணா்வுப் பேரணி

போளூரில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்த தவெக எம்எல்ஏ
மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்கல்வியை கட்டாயப் பாடமாக்க வேண்டும்: ஆசிரியா்கள் கோரிக்கை
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



