மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

நாய் கடித்து 4 சிறாா்கள் மருத்துவமனையில் அனுமதி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவா், சிறுமிகள் 4 போ் நாய் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

News image

நாய் - கோப்புப்படம்.

Updated On :7 மே 2026, 7:30 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவா், சிறுமிகள் 4 போ் நாய் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், சின்னக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா்கள் ராமதாஸ் மகன் பொற்செழியன்(4), ரகுராமன் மகன் பிரவின்குமாா்(4), சரவணன் மகள் லட்சுமிதேவி (4), வண்டிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த இ ளங்கோ மகள் நதிரா(3). இவா்கள் 4 பேரும் புதன்கிழமை மாலை சின்னக்குப்பம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனராம்.

அப்போது அங்கு வந்த நாய் ஒன்று 4 பேரையும் கடித்து விட்டு ஓடிவிட்டதாம். இதில் சிறுவா்கள் 4 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவா்களை பெற்றோா்கள் மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சையில் சோ்த்துள்ளனா்.

தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். இச் சம்பவத்தால் சின்னக்குப்பம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.