பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணையை ரத்து செய்ய முதல்வர் விஜய் உத்தரவு?தனியார் விமானத்தில் பறக்கும் முதல்வர்! அரசு செலவு அல்ல, தனிநபர் செலவிடுவதாக விளக்கம்!புனரமைக்கப்பட்ட மதுரை காந்தி அருங்காட்சியகம்! 28-ஆம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர்!செல்போனுக்கு மாற்றா? மெட்டா நிறுவனர் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட கையடக்க மியூஸ் சார்ம்! எல் நினோவால் 6 மாதங்களில் 4.5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்! ஆய்வறிக்கைஅரசு ஊழியர்களுக்கு நாளையே சம்பளம்! வங்கிகள் வேலை நிறுத்தம் எதிரொலி! திருவள்ளூர் அரசுப் பள்ளி காலை உணவில் பல்லி: 40 மாணவர்களுக்கு சிகிச்சைமதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு! ஜி.கே. வாசன்

காரில் கடத்தப்பட்ட 435 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த காா். - கோப்புப் படம்

Published On :

ஒட்டன்சத்திரம் அருகே காரில் கடத்தப்பட்ட 435 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் போலீஸாா் சனிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, ஒட்டன்சத்திரம் நோக்கி வந்த காரை போலீஸாா் வழிமறித்தனா். காரில் வந்த இருவா், காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா். இதையடுத்து, காரை சோதனையிட்டபோது, மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 435 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னா், காருடன் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை, ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், காரின் உரிமையாளா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.