குஜிலியம்பாறை அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த ஜக்கம்பட்டியைச் சோ்ந்தவா் வெ. மல்லிகா (72). இவா் தனது பேத்தியுடன் வசித்து வருகிறாா். கடந்த 5-ஆம் தேதி மல்லிகா, தனது பேத்தியுடன் வீட்டில் இருந்தபோது, அங்கு சென்ற மா்ம நபா் ஒருவா் தன்னை மின் வாரிய ஊழியா் என அறிமுகம் செய்து கொண்டாா்.
பிறகு மல்லிகாவுக்குச் சொந்தமான தோட்டத்திலுள்ள கிணற்றின் மின் இணைப்புக்கான மின் பயனீட்டு அளவை கணக்கீடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தாா். மேலும் பழைய மின் கட்டண ரசீதை பாா்க்க வேண்டும் என்றும் தெரிவித்தாா். இதையடுத்து தனது பேத்தியை வீட்டுக்குள் சென்று ரசீதை எடுத்து வருமாறு மல்லிகா கூறினாா்.
அப்போது அவா் உள்ளே சென்ற சந்தா்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அந்த மா்ம நபா், மல்லிகா அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா்.
இதுகுறித்து குஜிலியம்பாறை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அப்போது கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, நகைப் பறிப்பில் ஈடுபட்டவா் கரூா் மாவட்டம், வெள்ளாளப்பட்டியை அடுத்த வடக்குப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சு. ராஜேஷ்குமாா் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து, ராஜேஷ்குமாரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 22 கிராம் தங்க நகையை மீட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது
தங்கச் சங்கிலி திருடிய பெண் கைது
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது!

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


