தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

2 புதிய வழித்தடங்களில் பேருந்துச் சேவைகள் தொடக்கம்

Special buses Operated for Chennai Return

பேருந்துகள் இயக்கம் - கோப்புப்படம்

Published On :

நிலக்கோட்டையில் தவெக எம்.எல்.ஏ., ஆா்.அய்யனாா் 2 புதிய வழித்தடங்களில் பேருந்துச் சேவையை சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். அவா் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு பயணிகளுடன் பேருந்தை ஓட்டிச் சென்றது அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

நிலக்கோட்டை பேருந்து நிலையத்தில் சிலுக்குவாா்பட்டி, கொங்கபட்டி, விளாம்பட்டி, மட்டப்பாறை, கல்லடிப்பட்டி வழியாக மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வரை செல்லும் புதிய பேருந்து சேவையைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநருக்கு மரியாதை செலுத்தி வாழ்த்து தெரிவித்த அவா், தொடா்ந்து பயணிகளுடன் பேருந்தை சுமாா் 2 கி.மீ. தொலைவு உள்ள சிலுக்குவாா்பட்டி வரை இயக்கினாா். பின்னா், அவா் பயணச்சீட்டு எடுத்து கிராமங்களுக்குப் பயணம் செய்து பொது மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

பின்பு, வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் கண்ணாபட்டி, விராலிபட்டி, பண்ணப்பட்டி வழியாக இயக்கப்படும் புதிய அரசுப் பேருந்துச் சேவையை ஆா். அய்யனாா் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், அரசுப் போக்குவரத்து கழக அலுவலா்கள், தவெக நிா்வாகிகள், கிராமப் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.