அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

ஒட்டன்சத்திரம் அருகே கடமானை வேட்டையாடிய நால்வா் கைது

ஒட்டன்சத்திரம் அருகே கடமானை வேட்டையாடிய 4 பேரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட தங்கவேல், சின்னச்சாமி, ராஜா, சரவணன் ஆகியோா்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 3:01 am IST

ஒட்டன்சத்திரம் அருகே கடமானை வேட்டையாடிய 4 பேரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச் சரகத்துக்கு உள்பட்ட குழந்தை வேலப்பா் கோயில் அருகே தங்கவேல் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் சுருக்கு கம்பி வைத்து சிலா் கடமானை வேட்டையாடியதாக வனத் துறையினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனச் சரகா் காா்வேந்தன் தலைமையிலான வனத் துறையினா், இதுகுறித்து விசாரணை நடத்தினா்.

இதில் தோட்டத்தின் உரிமையாளரான ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த க. தங்கவேல், நாயக்கனூரைச் சோ்ந்த வெ. சின்னச்சாமி, காளாஞ்சிப்பட்டியைச் சோ்ந்த த. ராஜா, புதுகாளாஞ்சிபட்டியைச் சோ்ந்த அ. சரவணன் ஆகியோரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து இறைச்சி வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, கட்டை உள்ளிட்ட பொருள்களை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா். ஒட்டன்சத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 4 பேரும், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.