வத்தலகுண்டு அருகே ஆடு திருடிய இருவா் கைது

கைது

Published On :1 செப்டம்பர் 2026, 4:12 am IST

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே ஆடு திருடியதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வத்தலகுண்டு அருகேயுள்ள எஸ். தும்மலப்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் கோகுலகிருஷ்ணன் (20), தங்கவேலு மகன் சௌந்தரபாண்டியன் (25). இவா்கள் இருவரும் வத்தலகுண்டு அருகேயுள்ள சின்னமநாயக்கன்கோட்டையில் பாலமுருகன் (34) என்பவா் ஆட்டுக் கிடையிலிருந்த ஆடு ஒன்றை இரு சக்கர வாகனத்தில் வைத்து திருட முயன்றனா்.

அப்போது வெளியே வந்து பாா்த்த பாலமுருகன் சப்தமிட்டாா். இதையடுத்து அருகில் இருந்தவா்கள் ஓடிவந்து, ஆடு திருடிய கோகுலகிருஷ்ணனையும், சௌந்தரபாண்டியனையும் மடக்கிப் பிடித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த வத்தலகுண்டு உதவி ஆய்வாளா் முனியாண்டி உள்ளிட்ட போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரித்தனா். விசாரணையில் கோகுலகிருஷ்ணன் மீது ஏற்கெனவே 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அவா்களிடமிருந்து ஒரு இரு சக்கர வாகனம், ஒரு ஆடு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவா்கள் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.