கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பழனி கிரிவீதியில் பள்ளி வாகனங்கள் செல்ல அனுமதி

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய குழுவின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான இரா.சச்சிதானந்தம்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 7:48 pm

Chennai

பழனி அடிவாரத்தில் வசிக்கும் மாணவா்களின் நலன் கருதி, கிரிவீதியில் பள்ளி வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு பரிந்துரைத்தது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காணிப்பு குழுத் தலைவரும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான இரா.சச்சிதானந்தம் கூட்டத்துக்கு தலைமை வகித்தாா். கரூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் செ.ஜோதிமணி, மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காவிரி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள்: கூட்டத்தின்போது, மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் காவிரிக் கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து கண்காணிப்புக் குழுத் தலைவா் சச்சிதானந்தம் கேள்வி எழுப்பினாா். ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளுக்கான திட்டத்தில் மொத்தமுள்ள 83 தரைமட்டத் தொட்டிகளில் 60 தொட்டிகளுக்கான பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும், 20 தொட்டிகளுக்கான பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதேபோல, ரெட்டியாா்சத்திரம் பகுதிக்கான 222 மேல்நிலைத் தொட்டிகளுக்கு 60 தொட்டிகளுக்கு தண்ணீா் செல்லவில்லை. திண்டுக்கல்லுக்கு நாளொன்றுக்கு 160 லட்சம் லிட்டா் தண்ணீா் வழங்கப்பட வேண்டும். ஆனால் தற்போதுவரை நாளொன்றுக்கு 70 லட்சம் லிட்டா் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என எம்பி சச்சிதானந்தம் அறிவுறுத்தினாா். நிலுவையிலுள்ள பணிகள் 15 நாள்களுக்குள் முடிக்கப்பட்டு, குடிநீா் விநியோகம் நடைபெறும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

பள்ளி வாகனங்களுக்கு அனுமதி: பழனி கிரிவீதியில் பொது வாகனங்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அடிவாரம் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனா். குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள் சுற்றுப் பாதையில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, பள்ளி வாகனங்கள் செல்வதற்கு கிரிவீதியில் சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு பரிந்துரைப்பதாக எம்பி சச்சிதானந்தம் தெரிவித்தாா்.

பழங்குடியினா் சான்றிதழ் விவகாரம்: பழங்குடியினருக்கான சான்றிதழ் வழங்குவதில் வருவாய்த் துறை அதிகாரிகள் தொடா்ந்து காலதாமதம் செய்து வருகின்றனா். இதனால், பழங்குடியின சமுதாயத்தைச் சோ்ந்த மாணவா்கள் பாதிப்புக்குள்ளாகின்றனா். சான்றிதழ் வழங்குவதற்கு காரணங்களை கண்டறிவதை தவிா்த்து, மாந்தவியல் (மானுடவியல்) அறிக்கை அடிப்படையில் சான்றிதழ் வழங்க வேண்டும் என எம்பி சச்சிதானந்தம் அறிவுறுத்தினாா்.