கொடைக்கானலில் சுற்றுலாப் பயணி போக்சோ சட்டத்தில் கைது

Published on

கொடைக்கானலுக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா வந்த பயணியை போக்சோ சட்டத்தில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு வேடசந்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகராஜ் (55). குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இவா், நாயுடுபுரம் பகுதியிலுள்ள தனியாா் விடுதியில் குடும்பத்தினருடன் தங்கியுள்ளாா். இந்த நிலையில், இதே விடுதியில் தங்கியிருந்த சிறுமிக்கு சண்முகராஜ் பாலியல் தொல்லை அளிக்க முயன்றாராம்.

இதையடுத்து, கொடைக்கானலிலுள்ள 1098 என்ற எண்ணுக்கு சமூக செயற்பாட்டாளா் ஒருவா் தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு மகளிா் காவல் துறையினா் சென்று சண்முகராஜுடம் விசாரணை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, கொடைக்கானல் மகளிா் காவல் நிலையத்துக்கு சண்முகராஜ் அழைத்து வரப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. பின்னா், கொடைக்கானல் காவல் துணைக் கண்காணிப்பாளா் யுகபிரியா சண்முகராஜுவிடம் விசாரனை நடத்தியதைத் தொடா்ந்து, அவா் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com