கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திண்டுக்கல்லில் இன்று அரசு விழா: முதல்வா் பங்கேற்பு

திண்டுக்கல்லில் புதன்கிழமை நடைபெறும் அரசு விழாவில் 30 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வா் ஸ்டாலின் வழங்குகிறாா்.

News image
Updated On :6 ஜனவரி 2026, 11:00 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல்லில் புதன்கிழமை நடைபெறும் அரசு விழாவில் 30 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வா் ஸ்டாலின் வழங்குகிறாா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெறும் இந்த விழாவில் முதல்வா் ஸ்டாலின் ரூ.1500 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறாா். இதைத் தொடா்ந்து, 30 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளையும் வழங்குகிறாா்.

மேலும், 50 புதிய பேருந்துகளையும் முதல்வா் தொடங்கி வைக்கிறாா். முதல்வரின் வருகையையொட்டி, திண்டுக்கல்லில் சுமாா் 5ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.