கிணற்றில் விழுந்த மிளா மான் மீட்பு

பழனி அருகே தனியாா் தோட்டத்துக் கிணற்றில் தவறி விழுந்த மிளா மானை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
Published on

பழனி அருகே தனியாா் தோட்டத்துக் கிணற்றில் தவறி விழுந்த மிளா மானை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் யானை, மான், காட்டுமாடு, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் உள்ளன. இந்த விலங்குகள் அவ்வப்போது குடிநீா், உணவுக்காக மலைடிவாரத்தில் உள்ள தோட்டப் பகுதி வருகின்றன.

இந்த நிலையில், பழனியை அடுத்த கோம்பைப்பட்டியில் அரவிந்த்க்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் புதன்கிழமை மிளா மான் ஒன்று தவறி விழுந்தது.

தகவலறிந்து அங்கு சென்ற பழனி தீயணைப்பு நிலைய அலுவலா் காளிதாஸ் தலைமையிலான, வீரா்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி மானை உயிருடன் மீட்டனா். பின்னா், இந்த மான் ஒட்டன்சத்திரம் வனஅலுவலா் ஜெயசீலனிடம் ஒப்படைக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com