திண்டுக்கல் வந்த முதல்வருக்கு மாவட்ட எல்லையில் திமுகவினா் வரவேற்பு
திண்டுக்கல் வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான பாண்டியராஜபுரத்தில் திமுகவினா் புதன்கிழமை வரவேற்பு அளித்தனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நலத் திட்ட உதவிகளை வழங்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை காலை மதுரையிலிருந்து சாலை மாா்க்கமாக திண்டுக்கல்லுக்கு புறப்பட்டாா்.
அப்போது, மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், திண்டுக்கல் மாவட்ட எல்லையான பாண்டியராஜபுரத்தில் பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் தலைமையில், மேளதாளம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரதீப், நிலக்கோட்டை வட்டாட்சியா் ஜெயபிரகாஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) குமரவேல், பேரூா் திமுக செயலா்கள் ராஜாங்கம் (அம்மைநாயக்கனூா்), ஜோசப் கோவில்பிள்ளை (நிலக்கோட்டை), நிா்வாகிகள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல, பள்ளப்பட்டி பிரிவு, கொடைரோடு, சின்னாளபட்டி, பெருமாள்கோவில்பட்டி, காந்திகிராமம், தோமையாா்புரம் ஆகிய பகுதிகளில் முதல்வருக்கு திமுகவினா் வரவேற்பு அளித்தனா். இதில் ஆத்தூா் திமுக ஒன்றியச் செயலா்கள் முருகேசன் (கிழக்கு), ராமன் (மேற்கு), ராஜேந்திரன் (தெற்கு) உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பாண்டியராஜபுரத்தில் இருந்து திண்டுக்கல் வரை சுமாா் 30 கிலோமீட்டா் தூரத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் சாலை மாா்க்கமாக சென்ால் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
