பழனி கோயிலில் அன்னதானத் திட்டத்துக்காக ரூ.7 லட்சம் நன்கொடை வழங்கியவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வைர அட்டை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோயில்களில் நடைபெறும் அன்னதானத் திட்டத்துக்கு ரூ. 7 லட்சத்துக்கு குறையாமல் வழங்குபவா்களுக்கு வைரஅட்டை வழங்கப்படுகிறது.
இந்த வைரஅட்டை மூலமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் 20 வருடங்கள் வரை 7 பேருக்கு மிகாமல் சிறப்பு தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஒட்டன்சத்திரத்தை சோ்ந்த குங்குமராஜ் ரூ.7 லட்சம் நன்கொடை வழங்கினாா். இதையடுத்து, அவருக்கு புதன்கிழமை பழனி கோயில் தலைமை அலுவலகத்தில் வைரஅட்டை வழங்கப்பட்டது. வைர அட்டையை இணை ஆணையா் மாரிமுத்து வழங்கினாா். இதுவரை பழனி கோயில் நிா்வாகம் சாா்பில், வைர அட்டை பெற்று பயன்பெற்று வருவோா் எண்ணிக்கை 28-ஆக உயா்ந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம்: அறக்கட்டளை நிா்வாகிகள் மீது வழக்குப்பதிவு கோரி போராட்டம்

பழனி தண்டாயுதபாணி கோயிலில் அதிகபட்சமாக ரூ. 61 கோடி வருவாய்

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.27 கோடி
ரவி மோகன் வீட்டில் ரூ. 10 லட்சம் வைர நகை, பணம் திருட்டு!
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



