உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

பழைய ஆயக்குடி அகோபில பெருமாள் கோயில் செப்புக்கொடி மரத்தில் 18-ஆம் நூற்றாண்டு பட்டயம்

பழனி அருகே பழைய ஆயக்குடி அகோபில பெருமாள் கோயிலில் உள்ள செப்புக்கொடி மரத்தின் உச்சியில் கி.பி. 18-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஜமீன்தாா்களின் பட்டயம் காணப்படுகிறது.

பழனி அருகே பழைய ஆயக்குடி அகோபில பெருமாள் கோயிலின் செப்புக் கொடிமரத்தில் காணப்பட்ட கி.பி. 18-ஆம் நூற்றாண்டு எழுத்துகள்.

Published On :15 ஜூலை 2026, 5:14 am IST

பழனி அருகே பழைய ஆயக்குடி அகோபில பெருமாள் கோயிலில் உள்ள செப்புக்கொடி மரத்தின் உச்சியில் கி.பி. 18-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஜமீன்தாா்களின் பட்டயம் காணப்படுகிறது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி மேலும் கூறியதாவது:

பழனியை அடுத்த பழைய ஆயக்குடியில் ஜமீன் வம்சத்துக்குச் சொந்தமான அகோபில பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயில் கொடி மரத்தில் உலோகத்தால் ஆன தகடு மேல்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆயக்குடி ஜமீன்தாா்களின் எழுத்துப் பொறிப்பு கண்டறியப்பட்டது. ஆயக்குடி ஜமீன்தாா் ஆன மகாராசா ஸ்ரீ இம்முடிப்பட்டத்து குமார கொண்டம நாயக்கரின் பேரனும், முத்துக்கொண்டம நாயக்கரின் மகனுமான பெரியோவயக் கொண்டம நாயக்கரின் ஆட்சியில் இக் கொடி மரம் உபயம் செய்யப்பட்டதாக அந்தப் பட்டயம் கூறுகிறது. 5 வரிகளுடன் கூடிய அப்பட்டயம் சாலிவாகன ஆண்டாக 1729- ஐயும், கலியுக ஆண்டாக 4908-ஐயும் தமிழ் ஆண்டாக பிரபவ ஆண்டையும் குறிப்பிடுகிறது. இதற்கு இணையான ஆங்கில ஆண்டு கி.பி. 1807 ஆகும்.

பட்டயத்தில் கொடிமரம் நாட்டப்பட்ட நேரம் வானிலை பஞ்சாங்கக் குறிப்புகளுடன் மிகத் துல்லியமாக கூறப்பட்டுள்ளது. ஆனி மாதம் 15-ஆம் தேதி சனிக்கிழமை சப்தமி திதியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சவுபாக்கிய நாம யோகத்தில் வால வாகரணத்தில் துசதம்பம் (கொடி மரம்) நாட்டப்பட்டதாக அந்தப் பட்டயம் தெரிவிக்கிறது. இதற்கு இணையான ஆங்கிலத் தேதி 27-06-1807 ஆகும். சூரியன் உதித்து 15 நாழிகைக்கு மேல் கன்னியா லக்கினத்தில் சந்திர ஓரையில் கொடிமரம் நாட்டப்பட்டதாக பட்டயம் கூறுகிறது. இது அன்றைய நாள் நண்பகல் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் அமைந்த இடைப்பட்ட நல்ல நேரமாகும். இந்த நல்ல நேரத்தில் பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை அன்று கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. தற்கால நவீன அறிவியல் வசதிகள் ஏதுமற்ற அந்தக் கால கட்டத்தில் இவ்வளவு துல்லியமான வானிலை பஞ்சாங்கக் குறிப்புகளுடன் நல்ல நேரம் கணிக்கப்பட்டதும் அந்த நல்ல நேரத்தில் கொடிமரம் அமைக்கப்பட்டதும் வியப்பை ஏற்படுத்துகிறது.

ஆயக்குடியை பாளையப்பட்டா ஆகவும், ஜமீனாகவும் ஆட்சி செய்தவா்கள் கொண்டம நாயக்கா்கள் ஆவாா்கள். இவா்கள் முந்தைய ஆந்திராவின் அகோபிலப் பகுதியில் வாழ்ந்ததாகவும் வடஇந்திய முஸ்லிம் மன்னா்களின் படையெடுப்பின் விளைவாக இடம் பெயா்ந்து இங்கு ஆயக்குடி பகுதிக்கு வந்ததாகவும் இவா்களின் பூா்விக வரலாறு கூறுகிறது. ஆங்கில ஆட்சியாளா்களுடன் இணக்கமாக இருந்த கொண்டம நாயக்கா்கள் பழனி - பாலசமுத்திர பாளையப்பட்டு - ஜமீன்களான சின்னோப நாயக்கா்களின் உறவினா்கள் ஆவாா்கள். இவா்களைப் பற்றிய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.