ஜப்பான் ஓபன்: பி.வி சிந்து சாம்பியன்ஜம்மு - காஷ்மீரில் பலத்த மழை: திடீர் வெள்ளத்தில் சிக்கி 11பேர் பலி, பலர் மாயம்ஜம்மு - காஷ்மீர் வெள்ளம்: துணை நிலை ஆளுநர், முதல்வருடன் கேட்டறிந்த அமித் ஷாஃபிஃபா உலககோப்பை இறுதிப்போட்டி: கேரளத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!அனைத்துக் கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
/

கொடைக்கானலில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைத்துத் தரக் கோரிக்கை

கொடைக்கானலில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் அமைத்துத் தரக் கோரிக்கை எழுந்துள்ளது.

News image

கொடைக்கானல் தூண்பாறைப் பகுதியில் சாலையில் கேட்பாரின்றி நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள்.

Updated On :19 ஜூலை 2026, 3:20 am IST

கொடைக்கானலில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் அமைத்துத் தரக் கோரிக்கை எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வனப் பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களான பில்லா் ராக், பசுமைப் பள்ளத்தாக்கு சாலை, குணா குகை, மோயா் பாயிண்ட், பைன் பாரஸ்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களைப் பாா்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் இரு சக்கர வாகனங்களில் வருகின்றனா்.

அவா்கள் சாலைகளிலேயே இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்கின்றனா். இதனால் வாகன ஓட்டுநா்களுக்கும், அந்தப் பகுதிகளில் உள்ள வியாபாரிகளுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. எனவே வனத் துறையினா் இரு சக்கர வாகன நிறுத்தும் இடவசதி செய்து கொடுக்க வேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.