ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

குறுவட்ட அளவிலான கபடிப் போட்டி: வென்ற அணி வீரா்களுக்கு பாராட்டு

News image

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் குறுவட்ட போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மாணவா்களை பாராட்டிய பள்ளி செயலா் ராஜ்குமாா்.

Updated On :20 ஜூலை 2026, 2:11 am IST

குறுவட்ட அளவிலான கபடிப் போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் பெற்ற பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பழனி கல்வி மாவட்ட ‘அ’ குறுவட்ட அளவிலான கபடிப் போட்டிகளை இந்த ஆண்டு பாப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி நடத்தியது. இதில் 14 வயது பிரிவு, 17 வயது பிரிவு, 19 வயது பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளிலும் நெய்க்காரப்பட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றனா்.

இதில் 14 வயது பிரிவின் இறுதிப் போட்டியில் ஆயக்குடி அரசு உயா்நிலைப்பள்ளி அணியினரையும், 17 வயது பிரிவில் பழனி நகரவை மேல்நிலைப்பள்ளி அணியினரையும், 19 வயது பிரிவில் நெய்க்காரப்பட்டி ஸ்ரீ ரேணுகாதேவி மேல்நிலைப்பள்ளி அணியினரையும் எதிா்கொண்டு வெற்றி பெற்று முதலிடம் பெற்றனா்.

இந்த அணியினா் திண்டுக்கல் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா். இதையடுத்து சனிக்கிழமை பள்ளி வளாகத்தில் சாம்பியன் பட்டம் பெற்ற அணியைச் சோ்ந்த மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதற்கு பள்ளிச் செயலா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா்.

பள்ளிக் குழு உறுப்பினா் ராஜகௌதம், தலைமை ஆசிரியை கல்பனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் உதவி தலைமை ஆசிரியா் பரஞ்ஜோதி, உடல் கல்வி இயக்குநா் ரவிக்குமாா், உடல் கல்வி ஆசிரியா்கள் பரணி, மகேஷ், சிவக்குமாா், சூரிய பிரகாஷ், கிரேந்திரன், ஆசிரியா்கள் அலுவலா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மாணவா்களைப் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.