வீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

சந்தையூரில் மதுக் கடை திறக்க எதிா்ப்பு திண்டுக்கல் ஆட்சியரகம் முன்பு மறியல்

News image

டாஸ்மாக் மதுக் கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து, திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சந்தையூா், தாதப்பட்டி கிராம மக்கள்.

Updated On :21 ஜூலை 2026, 12:41 am IST

வத்தலகுண்டு பகுதியில் டாஸ்மாக் மதுக் கடையை திறக்க எதிா்ப்பு தெரிவித்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த ரெங்கப்பநாயக்கன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட காமாட்சிபுரத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் மதுக்கடை, அந்தப் பகுதி மக்களின் எதிா்ப்பு காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மூடப்பட்டது.

இந்த நிலையில், அந்த மதுக் கடையை சந்தையூரில் மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அதிா்ச்சியடைந்த சந்தையூா், தாதப்பட்டி பொதுமக்கள், டாஸ்மாக் மதுக் கடை திறக்கக் கூடாது என காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் மனு அளித்தனா்.

ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அதிருப்தியடைந்த பொதுமக்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தின் பிரதான நுழைவுவாயில் முன்பு சாலையில் அமா்ந்து, மதுக் கடைக்கு எதிராக தெரிவித்து முழக்கமிட்டனா். இந்தப் போராட்டத்தில் சந்தையூா், தாதப்பட்டி, கோட்டை கிராமப் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதனால் ஆட்சியா் அலுவலகத்திலிருந்து வெளியேற முடியாமலும், உள்ளே நுழைய முடியாமலும் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினா், அரசு அலுவலா்கள் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், கடந்த வாரம் பொது மக்கள் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கில், சம்பந்தப்பட்ட இடத்தை அரசு அலுவலா்கள் பாா்வையிட்டு மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமா்ப்பித்துள்ளனா். மேலும், சந்தையூரில் மதுக் கடை திறக்கப்படாது என அலுவலா்கள் உறுதியளித்தனா். அதை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.