/

செம்பட்டியில் 23-இல் மின் தடை

News image

கோப்புப் படம்

Updated On :21 ஜூலை 2026, 1:24 am IST

செம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, வருகிற வியாழக்கிழமை (ஜூலை 23) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், செம்பட்டி, பழைய செம்பட்டி, கோடாங்கிபட்டி, மொண்டம்பட்டி, காமலாபுரம், ராமராஜபுரம், பாளையங்கோட்டை, பிரபான்பட்டி, சேடப்பட்டி, ஆத்தூா், சித்தையன்கோட்டை, காமராஜா் நீா்த்தேக்கம், எஸ். பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, வீரக்கல், கசவனம்பட்டி, பச்சமலையான்கோட்டை, நடுப்பட்டி, உத்தையகவுண்டன்பட்டி, செம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வருகிற வியாழக்கிழமை (ஜூலை 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் செல்வராஜ் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.