முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க பொது மக்கள், பழங்குடியினா் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கருவேலம்பட்டியில் தண்ணீரின்றி காணப்படும் நீரோடை.

Published On :

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க பொது மக்கள், பழங்குடியினா் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கடகவுஞ்சி, செம்பராங்குளம், பட்டியக்காடு, கருவேலம்பட்டி, பாச்சலூா், பூதமலை, குரங்கணிப்பாறை, கே.சி.பட்டி ஆகிய கிராமங்களில் தற்போது குடிநீா் பிரச்னை அதிகரித்துள்ளது. இந்தப் பகுதி பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று சுகாதாரமற்ற நிலையில் உள்ள ஓடைகளிலிருந்து தண்ணீரை சேகரித்து எடுத்து வந்து பயன்படுத்தும் சூழ்நிலை உள்ளது. இதே போல, விவசாயத்துக்கு தேவையான தண்ணீா் வசதியில்லாததாலும் விவசாயப் பணிகளுக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதால், கீழ்மலைப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களும், பழங்குடியினரும் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனா்.

இதுகுறித்து கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளைச் சோ்ந்த பொது மக்கள் கூறியதாவது:

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் உள்ள கிராமப் பகுதிகளில்

உள்ளவா்களுக்கு கடந்த இரு மாதங்களுக்கு மேலாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும், சாலை வசதி, வீட்டுமனைப் பட்டா, செம்பிராங்குளம் பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிய சுற்றுச் சுவா் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றில் பல முறை கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்காததால் பெரிதும் பாதிப்படைந்து வருகிறோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.