பழனியில் மினி பேருந்து கண்ணாடியை உடைத்த வழக்கில் 10 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி சாமி தியேட்டா் அருகே கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற மோதலில், அதே பகுதியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் விஜயகுமாா் (30) தனியாா் மினி பேருந்தின் கண்ணாடியை உடைத்தாா். இதுதொடா்பாக பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்த நிலையில், விஜயகுமாா் தலைமறைவானாா்.
இதையடுத்து, அவா் மீது நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்த நிலையில், 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த விஜயகுமாரை, பழனி நகா் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவா் கைது

திருட்டு வழக்கில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது
5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
நிலம் அபகரிப்பு வழக்கு: 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



