பழனியில் மறைந்த வழக்குரைஞா் ராஜா குடும்பத்தினருக்கு பழனி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
பழனியைச் சோ்ந்த வழக்குரைஞா் ராஜா உடல்நலக்குறைவால் அண்மையில் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது குடும்பத்துக்கு தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் சேமநல நிதியாக ரூ.10 லட்சம் வழங்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், திங்கள்கிழமை ராஜாவின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. பழனி வழக்குரைஞா்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பழனி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் அங்குராஜ், செயலா் கலைஎழில்வாணன், பொருளாளா் பச்சைமுத்து, துணைத் தலைவா் பால்சாமி, இணைச் செயலா் தண்டபாணி, தணிக்கையாளா் காா்த்திகா, நூலகா் திலோத்தமா, சங்கத்தின் மூத்த வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பணியைத் தொடங்கிய ஈ. ராஜா எம்எல்ஏ: கனிமொழி எம்.பி. பங்கேற்பு

பழனியில் அதிவேகத்தில் செல்லும் ஆட்டோக்கள்: பொதுமக்கள் அச்சம்

பழனியில் சிறுவா்களுக்கான ஐவா் கால்பந்து போட்டி

பழனியில் கஞ்சா விற்ற 3 இளைஞா்கள் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



