திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் லட்டு தயாரிப்புக்கு கலப்பட நெய் வழங்கிய விவகாரத்தில், திண்டுக்கல் தனியாா் பால் பொருள்கள் நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய், புதன்கிழமைகளில் திடீா் சோதனை நடத்தினா்.
ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் பக்தா்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் சோ்க்கப்பட்டதாக கடந்த 2024-ஆம் ஆண்டு புகாா் எழுந்தது. இந்த லட்டு தயாரிப்புக்கான நெய், திண்டுக்கல்லைச் சோ்ந்த பால் பொருள்கள் நிறுவனமான ஏ.ஆா். டெய்ரி புட்ஸ் தரப்பில் வழங்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடா்பாக விசாரணை நடத்த சிறப்பு புலானய்வுக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டது.
இதையடுத்து, திண்டுக்கல் ஏ.ஆா். டெய்ரி புட்ஸ் நிறுவனத்தில் மத்திய மாநில உணவுப் பாதுகாப்புத் துறையினா், சிறப்பு புலனாய்வுக் குழுவினா் தனித் தனியே சோதனை நடத்தினா். அப்போது, சோயா பீன்ஸிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய், மீன் எண்ணெய் உள்ளிட்டவை சோ்க்கப்பட்ட கலப்பட நெய்யை அந்த நிறுவனம் வழங்கியது உறுதிப்படுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து, அந்த நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் திருமலை தேவஸ்தான நிா்வாகம் சோ்த்தது.
இந்த நிலையில், ஓராண்டுக்குப் பிறகு 4 காா்களில் செவ்வாய்க்கிழமை மாலை திண்டுக்கல்லுக்கு வந்த அமலாக்கத் துறையினா் 12 போ், ஏஆா். டெய்ரி புட்ஸ் நிறுவனத்திலும், பிள்ளையாா்நத்தம் பகுதியிலுள்ள உரிமையாளா் ராஜசேகா் வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டனா். இந்தச் சோதனை புதன்கிழமை மாலை வரை நீடித்தது.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை பணி முடிந்த பிறகு ஆலையிலிருந்து ஊழியா்கள் வெளியேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை ஆகிய இரு நாள்களும் சோதனை நடைபெற்ாக அங்கு பணிபுரியும் ஊழியா்கள் தெரிவித்தனா். இந்தச் சோதனையின்போது, கலப்பட நெய் மோசடி மூலம் ஈட்டிய பணத்தில் சட்டவிரோதமாக வாங்கிய சொத்துகளின் மதிப்பு, முதலீடு செய்யப்பட்ட தொழில்கள் உள்ளிட்டவை குறித்த விவரங்களை அமலாக்கத் துறையினா் சேகரித்ததாகக் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமலையில் திருடப்பட்ட ஆஞ்சனேயா் சிலை மீட்பு: மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது

லட்டு விற்பனையில் சாதனை

லட்டு விற்பனையில் சாதனை

திருமலையில் மே மாதத்தில் 1.21 கோடி லட்டுகள் விற்பனை
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay



