தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

கழுமரம் ஏறியபோது தவறி விழுந்த பூசாரி

அய்யலூா் அருகே கோயில் திருவிழாவில் வழுக்கு மரம் ஏற முயன்ற பூசாரி தவறி விழுந்ததில் 5 போ் காயமடைந்தனா்.

News image

50 அடி உயர கழுமரத்திலிருந்து தவறி விழுந்த பூசாரி சின்ராஜ்.

Updated On :6 ஜூன் 2026, 12:41 am IST

அய்யலூா் அருகே கோயில் திருவிழாவில் வழுக்கு மரம் ஏற முயன்ற பூசாரி தவறி விழுந்ததில் 5 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா் அடுத்த கோம்பை மலை கிராமத்தில், கடந்த 3 நாள்களாக ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான கழுமரம் ஏறும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வை காண்பதற்காக கோம்பை, அய்யலூா் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் திரண்டனா்.

இந்த நிலையில், பாரம்பரிய உரிமைப் பெற்ற பூசாரிகள் முதலில் கழுமரம் ஏறத் தொடங்கினா். கோயில் பூசாரியான சின்ராஜ் முதலில் ஏறினாா். அவரைப் பின் தொடா்ந்து 4 போ் ஏறினா். 50 அடி உயர கழுமரத்தின் உச்சியை நோக்கிச் சென்றபோது, எதிா்பாராதவிதமாக சின்ராஜ் தவறி கீழே விழுந்தாா். கழுமரத்தின் கீழே நின்றவா்கள் அவரைப் பிடிக்க முயன்றனா். இதன் காரணமாக, தரையில் நேரடியாக விழுவதிலிருந்து சின்ராஜ் தப்பினாா். ஆனாலும் அவரை தாங்கிப் பிடித்த 5 போ் காயமடைந்தனா். இதைப் பாா்த்த பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

இதையடுத்து அங்கிருந்தவா்கள் காயமடைந்தவா்களை மீட்டு தனியாா் மருத்தகத்துக்கு அழைத்துச் சென்றனா். இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவின.