திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை காற்றுடன் பெய்த பலத்த மழையால் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கொடைக்கானலில் கடந்த இரு நாள்களாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை முதல் கொடைக்கானல் பகுதியில் மேகமூட்டமாக காணப்பட்டது. பிற்பகலில் கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனூா், பூண்டி, கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், கூக்கால் பகுதியில் செல்லும் மின்கம்பி சேதமடைந் தது. இவற்றை மின்வாரிய பணியாளா்கள்சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். பல மணி நேரத்துக்கு பிறகு மின் விநியோகம் சீரானது.
இதைத் தொடா்ந்து, கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் காற்றுடன் மிதமான மழை பெய்தது. இதனால், தடியன்குடிசை பகுதியான மங்களம் கொம்பு-ஆடலூா் மலைச் சாலையில் இரு மரங்கள் முறிந்து கீழே விழுந்ததால் நான்கு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த தாண்டிக்குடி போலீஸாா், நெடுஞ்சாலைத் துறையினா், வனத் துறையினா் சென்று கீழே விழுந்து கிடந்த மரங்களை பொதுமக்கள் உதவியுடன் இயந்திர அறுவை மூலம் அகற்றினா். இதையடுத்து, போக்குவரத்து சீரானது.
இந்த நிலையில் கொடைக்கானல் மலைச் சாலைகளில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்றுவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூடலூரில் சூறைக் காற்றுடன் மழை: வாழை மரங்கள் முறிந்து சேதம்- நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

கொடைக்கானலில் பலத்த காற்று மின் கம்பிகள் மீது மரங்கள் விழுந்ததால் பல மணி நேரம் மின் தடை

கூடலூரில் 2-ஆவது நாளாக காற்றுடன் கனமழை: சாலையில் சாய்ந்த மரங்கள்; சேதமடைந்த வாழைகள்







