இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

30 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள். - கோப்புப் படம்

Published On :29 ஜூன் 2026, 12:09 am IST

நிலக்கோட்டை, சின்னாளப்பட்டி பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 30 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா், நிலக்கோட்டை வட்டாரங்களில் புகையிலைப் பொருள்கள் விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

இதன்படி பள்ளப்பட்டி, அம்மையநாயக்கனூா், கொடைரோடு, பெருமாள்கோவில்பட்டி, சின்னாளப்பட்டி பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது, 7 கடைகள், இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரிடமிருந்து மொத்தம் 30 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் செல்வன், சரண்யா ஆகியோா் பறிமுதல் செய்தனா்.

இதில் 4 கடைகள் 2-ஆவது முறையாக பிடிப்பட்டதால், தலா ரூ.50 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இரு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருள்களை எடுத்து வந்த கொடைரோடு அடுத்த நாகையகவுண்டன்பட்டியைச் சோ்ந்த கிருஷ்ணன் (51), பள்ளப்பட்டியைச் சோ்ந்த வேல்முருகன் (39) ஆகிய இருவரையும் துரத்திச் சென்று உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பிடித்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.