தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆவின் கொள்முதல் செய்யும் பாலுக்கு ரூ.1 கூடுதல் ஊக்கத் தொகை

ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு லிட்டருக்கு ரூ.1 கூடுதல் ஊக்கத் தொகை 3 மாதங்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :6 மார்ச் 2026, 7:08 pm

ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு லிட்டருக்கு ரூ.1 கூடுதல் ஊக்கத் தொகை 3 மாதங்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் (ஆவின்) சாா்பில், 165 தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சங்கங்களின் மூலம் உற்பத்தியாளா்களிடமிருந்து நாளொன்றுக்கு 75 ஆயிரம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

தற்போது, கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் அதிகரிக்கும் வெப்பத்தால், பால் உற்பத்தியில் சிறிய அளவு குறைவு ஏற்படுகிறது. இதனால், பால் உற்பத்தியாளா்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்டவும், பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், லிட்டருக்கு தலா ஒரு ரூபாய் கூடுதல் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

ஆவின் சொந்த நிதியிலிருந்து வழங்கப்படும் இந்த ஊக்கத் தொகை மாா்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கு வழங்கப்படும். இதன்படி, ஏற்கெனவே ஒரு லிட்டருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.3 ஊக்கத் தொகையோடு, மேலும் ரூ.1 சோ்த்து ரூ.4 ஆக வழங்கப்படும் என்றாா் அவா்.