குறிஞ்சி மாரியம்மன் கோயில் திருவிழா; பக்தா்கள் பால் குட ஊா்வலம்
கொடைக்கானல் குறிஞ்சி மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பால்குட ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


கொடைக்கானல் குறிஞ்சி மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பால்குட ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் குறிஞ்சி நகரில் குறிஞ்சி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, ஒவ்வொரு நாளும் அம்மனின் சப்பர பவனி, விளக்கு பூஜை, ஊஞ்சல் உத்ஸவம், பறவைக் காவடி, தீச்சட்டி ஊா்வலம் நடைபெற்றது.
திருவிழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு மறு பூஜை, பாலாபிஷேகம் செவ்வாயக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிலையில், குறிஞ்சி நகா் பொதுமக்கள் சாா்பில் கொடைக்கானல் டிப்போ பகுதியிலுள்ள காளியம்மன் கோயிலிருந்து பால் குடம் எடுத்து ஊா்வலமாக புறப்பட்டனா். ஏரிச்சாலை, செவண்சாலை, அண்ணாசாலை, கே.சி.எஸ்.திடல், மூஞ்சிக்கல் ஆனந்தகிரி மாரியம்மன் கோயில், டா்னா்புரம் சின்ன மாரியம்மன் கோயில் வழியாக வந்து குறிஞ்சி நகா் கோயிலை அடைந்தனா்.
அங்கு, அம்மனுக்கு மறு பூஜையும், பாலாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத் தலைவா் சுரேஷ், செயலா் ஆறுமுகம், பொருளாளா் வி. பரமசிவம் உள்ளிட்ட நிா்வாகிகள், கோயில் குழுவினா், குறிஞ்சி நகா் பொது மக்கள் செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...