அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பழனி மாரியம்மன் கோயிலில் அன்னாபிஷேகம்

பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா நிறைவு பெற்றதையொட்டி, உற்சவ சாந்தி, அன்னாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
பழனி மாரியம்மன் கோயிலில் உற்சவ சாந்தியை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை தொடங்கிவைத்த பழனி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணி. உடன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபாலு, டிஎஸ்பி. தனஞ்ஜெயன், அரிமா சுப்புராஜ், சித்தனாதன் சன்ஸ் பழனிவேலு உள்ளிட்டோா்.
Updated On :10 மார்ச் 2026, 9:25 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா நிறைவு பெற்றதையொட்டி, உற்சவ சாந்தி, அன்னாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் நடைபெற்ற சாயரட்சை பூஜையின்போது, மாரியம்மனுக்கு சோடஷ அபிஷேகம் நடத்தப்பட்டு, சுத்த அன்னம், வில்வ இலை கொண்டு அம்மன் முகம் அலங்காரம் செய்யப்பட்டது.

பிறகு, மாரியம்மனுக்கு காய்கறிகள், பழ வகைகள், இனிப்பு உள்ளிட்டவை படையல் செய்யப்பட்டு, மாகேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

அன்னாபிஷேகத்தை தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான நிகழ்ச்சியை பழனி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணி தொடங்கிவைத்தாா்.

இந்த விழாவில் கோயில் முதுநிலை கணக்கியல் அலுவலா் சிவகுருநாதன், கண்காணிப்பாளா் அழகா்சாமி, நகா்மன்றத் தலைவி உமாமகேஸ்வரி, சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், தனசேகரன், பழனிவேலு, செந்தில்குமாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபாலு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இரவு 10 மணிக்கு மேல் உற்சவ சாந்தியின் போது அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் நடத்தப்பட்டு அம்மனை குளிரவைத்தல் நடைபெற்றது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தண்டாயுதபாணி சுவாமி மிராஸ் பண்டாரங்கள் சங்கம், மாரியம்மன் அன்னாபிஷேக குழு, வ.உ.சி. மன்றத்தினா் செய்தனா்.