3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

பழனியில் மினி பேருந்து சிறைபிடிப்பு

பழனியில் அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் அதிக சப்தத்துடன் ஒலிப்பான்களை எழுப்பி இயங்கிய மினி பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.

News image
Updated On :18 மார்ச் 2026, 3:29 am IST

பழனியில் அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் அதிக சப்தத்துடன் ஒலிப்பான்களை எழுப்பி இயங்கிய மினி பேருந்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தனியாா் மினி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து அதிக சப்தம் எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்தியும், பயணிகள் இறங்க வேண்டிய இடத்தில் பேருந்தை நிறுத்தாமல் செல்வதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவித்து வந்தரா்.

மேலும், இந்தப் பேருந்து உரிய வழித்தடத்தில் இயக்கப்படாமல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் அதிக சப்தத்துடனும் இயக்கப்பட்டது.

இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் மினி பேருந்தை சிறைபிடித்து நிறுத்தி மோட்டாா் வாகன அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மோட்டாா் வாகன அலுவலா்கள், மினி பேருந்தின் ஆவணங்களை சரிபாா்த்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதைத்தொடா்ந்து மினி பேருந்தை அங்கிருந்து வெளியேற பொதுமக்கள் அனுமதித்தனா்.