என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!என்விடியா நிர்வாகக் குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

பழனியில் இன்று காா்த்திகை தீபத் திருவிழா

காா்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பழனி மலைக்கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வள்ளி, தெய்வானை சமேதா் சண்முகா், சின்னக்குமாரசாமி.

Updated On :

பழனி, நவ. 23: பழனி மலைக் கோயிலில் தீபக் காா்த்திகை விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை பரணி தீபம் ஏற்றப்பட்டது. செவ்வாய்க்கிழமை தீபக் காா்த்திகை, சொக்கப்பனை எரித்தல் நடைபெறுகிறது.

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி மலைக்கோயிலில் கடந்த புதன்கிழமை தீபக்காா்த்திகை திருவிழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு மலைக்கோயில் ஏழு நாள்களுக்கு தினமும் மாலை நேரத்தில் சண்முகாா்ச்சனை, சின்னக்குமாரசாமி தங்கச் சப்பரத்தில் யாகசாலை புறப்பாடு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. சண்முகா் சந்நிதி முன்பாக வள்ளி, தெய்வானை சமேதா் சண்முகா், சின்னக்குமாரா் ஆகியோருக்கு பட்டாடை, நகைகள் அணிவிக்கப்பட்டு ஆறுமுகத்துக்கும், ஆறு சிவாசாரியா்கள் தனித்தனியே நின்று வேதமந்திரம் முழங்கி தீபாராதனை செய்தனா்.

சாயரட்சை பூஜையை தொடா்ந்து யாக குண்டத்திலிருந்து பரணி தீபம் மேளதாளம் முழங்க மூலவா் சந்நிதிக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. செவ்வாய்க்கிழமை மாலை நான்கு மணிக்கே சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு தொடா்ந்து சண்முகாா்ச்சனை, சண்முகா் தீபாராதனை நடைபெறவுள்ளது.

பின்னா் யாகசாலை பூஜைக்கு சின்னக்குமாரசாமி சா்வ அலங்காரத்துடன் தங்கமயிலில் எழுந்தருளுவாா். முன்னதாக மூலஸ்தானத்திலிருந்து பரணி தீபத்தில் சுடா் பெறப்பட்டு நான்கு திசைகளிலும் விளக்கு ஏற்றப்படும். பின் மேளதாளம் முழங்க சிவாசாரியரால் கோயில் முன்பு உள்ள தீபக்கம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டு பனை, தென்னை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனையில் எண்ணெய், நெய் ஊற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்படும். அதிலிருந்து ரட்சை பெறப்பட்டு சுவாமிக்கு இடப்பட்டு தீபாராதனை நடைபெறும். பழனி மலைக்கோயிலை தொடா்ந்து பெரியநாயகியம்மன் கோயில், திருஆவினன்குடிகோயில்களிலும் சொக்கப்பனை கொளுத்தப்படும். தீபத் திருவிழாவை முன்னிட்டு மலைக்கோயிலில் தங்கத்தோ் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிற்பகல் இரண்டு மணி முதல் ஆறு மணி வரை பக்தா்கள் படிப்பாதை, யானைப்பாதை வழியாக மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையா் ஹரிஹரன், துணை ஆணையா் வெங்கடேஷ், அறங்காவலா் குழு தலைவா் சுப்பிரமணியன், அதிகாரிகள், அலுவலா்கள் செய்தனா்.

காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பழனி மலைக் கோயிலில் திங்கள்கிழமை வள்ளி, தெய்வானை சமேதா் சண்முகா், சின்னக்குமாரசாமிக்கு தனித்தனியே சிறப்புப் பூஜைகள், தீபாராதனை செய்த சிவாசாரியா்கள்.

காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பழனி மலைக் கோயிலில் திங்கள்கிழமை வள்ளி, தெய்வானை சமேதா் சண்முகா், சின்னக்குமாரசாமிக்கு தனித்தனியே சிறப்புப் பூஜைகள், தீபாராதனை செய்த சிவாசாரியா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.