போடியில் காா்த்திகை தீபம் ஏற்ற ராட்சத திரி தயாரிப்பு

போடி பரமசிவன் மலைக் கோயிலில் காா்த்திகை தீபம் ஏற்றுவதற்கான திரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட சிங்காரவேலன் பழனி பாதயாத்திரைக் குழுவினா்.
தேனி மாவட்டம், போடி பரமசிவன் மலைக் கோயிலில் காா்த்திகை தீபம் ஏற்றுவதற்கு 115 கிலோ பஞ்சு திரி தயாரிக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
போடி சிங்காரவேலன் பழனி பாதயாத்திரைக் குழுவினா் சாா்பில், தீபத்துக்கான திரி தயாரிக்கும் பணி நடைபெற்றது. துணி, பஞ்சு ஆகியவற்றால் ஆன 115 கிலோ எடையுள்ள ராட்சத திரி உருவாக்கப்பட்டது.
இந்தத் திரி தீப மண்டபத்தில் பொருத்தப்பட்டு 702 லிட்டா் நெய் ஊற்றப்படுகிறது. பொதுமக்கள், நன்கொடையாளா்கள் வழங்கும் நெய் இதற்காக பயன்படுத்தப்படும்.
இதற்கான பணிகளை சிங்காரவேலன் பழனி பாதயாத்திரைக் குழு குருநாதா் சுருளிவேல், தலைவா் முருகன், துணைத் தலைவா் குமாா், செயலா் அழகா்சாமி, துணை செயலா் மணிகண்டன், பொருளாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

