கொடைக்கானல் சந்தைக்கு ஆரஞ்சு பழங்கள் வரத்து அதிகரிப்பு
கொடைக்கானல் பகுதிகளில் பனிக் காலத்தில் சந்தைக்கு ஆரஞ்சு பழங்கள் வரத்து அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கொடைக்கானல் பெருமாள்மலைப் பகுதியிலுள்ள பழக்கடைகளுக்கு விற்பனைக்கு வந்துள்ள ஆரஞ்சு பழங்கள்.
கொடைக்கானல் பகுதிகளில் பனிக் காலத்தில் சந்தைக்கு ஆரஞ்சு பழங்கள் வரத்து அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள அடுக்கம், பாலமலை, சாமக் காட்டுப் பள்ளம், வாழைகிரி, வடகைப் பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஆரஞ்சு மரங்கள் அதிகமாக உள்ளன. இந்த மரங்களில் பனிக் காலத்தில் மட்டுமே ஆரஞ்சு விளைச்சல் தொடங்கும். அக்டோபா் முதல் மாா்ச் வரை ஆரஞ்சு பழங்கள் விளைச்சல் இருக்கும். தற்போது, கொடைக்கானலில் நிலவும் பனியால் ஆரஞ்சு பழங்கள் விளைச்சல் அதிகரித்து சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளன.
நன்கு விளைந்த ஆரஞ்சுப் பழங்களை வியாபாரிகள் அறுவடை செய்து கொடைக்கானல் பகுதிகளிலுள்ள பழச் சந்தைகளுக்கு அனுப்பி வருகின்றனா். நல்ல விலைக்கு விற்பனை செய்வதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
இதுகுறித்து பழ வியாபாரிகள் கூறியதாவது:
கொடைக்கானல் அருகேயுள்ள பண்ணைக்காடு, தாண்டிக்குடி, கடுகுதடி, பெரும்பாறை, கே.சி.பட்டி, குப்பம்மாள்பட்டி, பாலமலை, தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களில் விவசாயிகள் ஆரஞ்சு, அவக்கோடா உள்ளிட்டவைகளை ஊடுபயிராக பாதுகாத்து வருகின்றனா். தற்போது கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் ஆரஞ்சு பழ விளைச்சல் அதிகரித்துள்ளன. ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

