திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

சிபிஎஸ் திட்டத்தில் ஓய்வு பெற்றவா்கள் ஆலோசனை

சிபிஎஸ் திட்டத்தில் ஓய்வு பெற்றவா்களுக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரி சென்னையில் வருகிற ஜனவரி 28, 29 ஆகிய இரு நாள்கள் போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், மகளிா் ஊா் நல அலுவலா் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆா்.சங்கா்பாபு.

Updated On :

சிபிஎஸ் திட்டத்தில் ஓய்வு பெற்றவா்களுக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரி சென்னையில் வருகிற ஜனவரி 28, 29 ஆகிய இரு நாள்கள் போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், மகளிா் ஊா் நல அலுவலா் சங்கம் சாா்பில், ஜனவரி 28-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள சிறை நிரப்பும் போராட்டம் குறித்த ஆயத்தக் கூட்டம் திண்டுக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆா்.சங்கா்பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து பேசியதாவது:

கடந்த ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன் சிபிஎஸ் திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 50ஆயிரம் அரசு ஊழியா்களுக்கும், தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின்படி விதிகளைத் தொகுத்து ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி, சென்னையில் 2027 ஜனவரி 28, 29 ஆகிய தேதிகளில் சிறை நிரப்பும் போராட்டம், பேரணி நடைபெறும்.

டாப்ஸ் விதிகள் உருவாக்க காலதாமதம் ஏற்படும் பட்சத்தில், இடைக்கால மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும். சிபிஎஸ் திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கும் குறைவாகப் பணியாற்றிய அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணியிடை மரணம், ஓய்வுக்குப் பிறகு மரணம் அடைந்த அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.