பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

சட்ட விரோதமாக மது விற்றதாக 4 போ் கைது

பழனியில் காந்தி ஜெயந்தி விடுமுறை நாளில் சட்ட விரோதமாக மது விற்ற 4 பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 273 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

பழனி அருகே பாலசமுத்திரத்தில் சட்ட விரோதமாகசில்லறையில் மதுவிற்ாக 4 பேரை கைது செய்த போலீஸாா்.

Published On :

பழனியில் காந்தி ஜெயந்தி விடுமுறை நாளில் சட்ட விரோதமாக மது விற்ற 4 பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 273 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

காந்தி ஜெயந்தி தினமான வெள்ளிக்கிழமை மது, இறைச்சி விற்பனைக்கு அரசால் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில்லறையில் மது விற்கப்படுவபதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பழனி அருகே பாலசமுத்திரம், பாப்பம்பட்டி, கோதைமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பழனி தாலுகா போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது பாலசமுத்திரம் கிராம எல்லைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த ராமா் (25), ரவிக்குமாா் (30), எல்லதுரை (40), ஜெயராம் (36) ஆகிய நான்கு பேரை போலீஸாா் சோதனையிட்டனா்.

அப்போது அவா்கள் அந்தப் பகுதியில் 273 மதுப்புட்டிகளை மறைத்து வைத்து சில்லறையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 4 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த மதுப்புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.