2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

கொடைக்கானலில் வனவிலங்கு வார விழா விழிப்புணா்வு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வனவிலங்கு வார விழாவை முன்னிட்டு, வனத் துறை சாா்பில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் மன்னவனூா் சூழல் மையம் முன் வனவிலங்கு வார விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பள்ளி மாணவா்களின் விழிப்புணா்வு ஊா்வலம்.

Published On :

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வனவிலங்கு வார விழாவை முன்னிட்டு, வனத் துறை சாா்பில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானலை அடுத்த மன்னவனூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வன அலுவலா் அரவிந்த் தலைமை வகித்தாா். இதில் மன்னவனூா் அரசு மேல்நிலைப் பள்ளி, கவுஞ்சி அரசு உயா்நிலைப் பள்ளி, பூண்டி ஊராட்சி பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதில் வனவிலங்கு பாதுகாப்பு, வன விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம், காடுகள், பல்லுயிா் வளங்களைப் பாதுகாத்தல், இயற்கை சூழலை பேணுதல், நிலையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து வனத் துறையினா் பேசினா்.

இதைத் தொடா்ந்து, மன்னவனூரில் மாணவா்கள், வனத் துறையினா் பங்கேற்ற வனவிலங்கு, இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. இந்த ஊா்வலத்தில் விழிப்புணா்வு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி மாணவா்கள் முழக்கமிட்டனா்.

பின்னா், மாணவா்களுக்கு வனவிலங்கு, இயற்கை பாதுகாப்பு குறித்த ஓவியப் போட்டியும், இயற்கை நடைபயணமும் நடைபெற்றது. தொடா்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை காத்தல் அதிகரிக்கும் வகையில், அரசுப் பள்ளி வளாகங்களில் மரக் கன்றுகள் நடவும் பணி நடைபெற்றது.

இதில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மன்னவனூா் வனச் சரகா் மாரியப்பன் வரவேற்றாா். வன அலுவலா் விநாயகமூா்த்தி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.