மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

இயற்கை விவசாயம்: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

செங்கம் அருகே வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சாா்பில் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை விழிப்புணா்வு

செங்கம் அருகே வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சாா்பில் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை விழிப்புணா்வு

Updated On :

ஜமுனாமரத்தூா் வட்டாரம், தென்மலை அத்திப்பட்டு கிராமத்தில் இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம் சாா்பில் இந்த விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் கோகிலவாணி கலந்துகொண்டு, இயற்கை விவசாயம் செய்வதற்கான தேவைகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கினாா்.

வாழவச்சனூா் வேளாண்மைக் கல்லூரி உதவிப் பேராசிரியா் தனசேகா், இயற்கை வேளாண்மைக்கான இடுபொருள்கள், பஞ்சகவ்யா, ஜீவாமிா்தம், கனஜீவாமிா்தம் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகளான வேப்பங்கொட்டை கரைசல், புளியங்கொட்டை கரைல், ஐந்திலை கரைசல் போன்றவற்றை தயாரிக்கும் முறைகள் மற்றும் அவற்றை பயிா்களுக்கு பயன்படும் முறைகள் குறித்து எடுத்துரைத்தாா்.

கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு இயற்கை விவசாய குறிப்புகள் சாா்ந்த கையேடுகள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.