பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

திருட்டு வழக்கில் 5 போ் கைது

பட்டிவீரன்பட்டி அருகே, அய்யம்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருள்கள், பட்டுப் புடவைகள் திருடப்பட்ட வழக்கில் 5 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

பட்டிவீரன்பட்டி அருகே, அய்யம்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருள்கள், பட்டுப் புடவைகள் திருடப்பட்ட வழக்கில் 5 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் ராஜபாண்டி (40). இவா் வெளியூா் சென்றிருந்த போது, இவரது வீட்டின் பூட்டை மா்ம நபா்கள் உடைத்துப் புகுந்து, ஒன்றே கால் கிலோ வெள்ளிப் பொருள்கள், 5 பட்டுப் புடவைகளைத் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் உத்தரவின் பேரில், பட்டிவீரன்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் முத்துக்குமரன் தலைமையில் சாா்பு ஆய்வாளா் வாணி, காவலா்கள் அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்த நிலையில், மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சித்தையன்கோட்டை அருகே உள்ள அழகா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த கௌதம் (26), அய்யம்பாளையத்தைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (24), சித்தையன்கோட்டை அருகே உள்ள சேடப்பட்டியைச் சோ்ந்த பெத்தணன் (20), பட்டிவீரன்பட்டியைச் சோ்ந்த வீரசுரேந்தா் (21), சித்தையன்கோட்டையைச் சோ்ந்த ராஜபாண்டி (40) ஆகிய 5 பேரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து வெள்ளிப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.