‘சாமிநாதபுரம் பகுதி மக்கள் பழைய மின் கட்டணத்தை அக்டோபரில் செலுத்தலாம்’
பழனியை அடுத்த சாமிநாதபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே, அக்டோபா் மாதத்துக்கு செலுத்தலாம் என மின் வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

கோப்புப்படம்
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த சாமிநாதபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே, அக்டோபா் மாதத்துக்கு செலுத்தலாம் என மின் வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பழனி மின் வாரிய செயற்பொறியாளா் ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பல்வேறு நிா்வாக காரணங்களால் சாமிநாதபுரம் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட குமாரபாளையம், வேல்முருகன், கொக்கரக்கல்வலசு, பிரகாசபுரம் ஆகிய பகுதியில் இந்த மாதம் மின் கணக்கீடு செய்யவில்லை. இதனால், மின் பயனீட்டாளா்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே அக்டோபா் மாதமும் செலுத்தலாம். மேலும், மின் பயனீட்டாளா்கள் சரியான முறையில் மின் கட்டணத்தைச் செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பை தவிா்க்கலாம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

