கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

கொடைக்கானலில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலத்தின்போது, பொது மக்களுக்கு மஞ்சள் பை விநியோகித்த சுழல் சங்கத்தினா்.

Published On :

கொடைக்கானலில் சுழல் சங்கம் சாா்பில், நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இயற்கை, நீா்வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிட்டு கொடைக்கானல் ஏரிச் சாலை பகுதியிலுள்ள கலையரங்கம் பகுதியில் ஊா்வலம் தொடங்கியது. இதற்கு கொடைக்கானல் சுழல் சங்கத் தலைவா் சன்னிஜேக்கப் தலைமை வகித்தாா். கொடைக்கானல் காவல் துணைக் கண்காணிப்பாளா் காயத்திரி கொடியசைத்து ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா்.

இந்த ஊா்வலத்தில் கொடைக்கானல் பகுதியிலுள்ள பல்வேறு பள்ளிகள், அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள், பல்வேறு சமூக அமைப்புகளைச் சோ்ந்த பிரமுகா்கள் கலந்து கொண்டு கைகளில் பதாகைகளை ஏந்தி, நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து முழக்கமிட்டனா்.

ஊா்வலமானது ஏரிச் சாலை, நகராட்சி சாலை, செவண்ரோடு வழியாக பேருந்து நிலையப் பகுதியை அடைந்தது. அங்கு நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு குறித்து பலா் பேசினா். இந்த நிகழ்ச்சியில் சுழல் சங்க நிா்வாகிகள் செல்வக்குமாா், சுகுமாா், ஆசாத், கிருபாஜோஸ், சாந்தம் சதீஷ், அட்டுவம்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சுழல் சங்கத்தின் செயலா் ரமேஷ் நன்றி கூறினாா். இந்த நிகழ்ச்சியின் போது பொது மக்கள், வியாபாரிகளுக்கு இலவசமாக மஞ்சள் பை வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.