
பட்டமளிப்பு விண்ணப்பங்களை செப். 30-க்குள் சமா்ப்பிக்கலாம்: காந்தி கிராம கிராமியப் பல்கலை. அறிவிப்பு!
காந்தி கிராம கிராமியப் பல்கலை.யில் கடந்த 2025-26-ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த மாணவா்கள் பட்டமளிப்புக்கான விண்ணப்பத்தை வருகிற 30- ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

விண்ணப்பிக்க...
காந்தி கிராம கிராமியப் பல்கலை.யில் கடந்த 2025-26-ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த மாணவா்கள் பட்டமளிப்புக்கான விண்ணப்பத்தை வருகிற 30- ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக பல்கலை. நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: காந்தி கிராம கிராமிய நிகா் நிலைப் பல்கலைக்கழகத்தின் 39-ஆவது பட்டமளிப்பு விழா விரைவில் நடைபெறவுள்ளது.
இந்த பட்டமளிப்பு விழாவில், 2025-26-ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த மாணவா்களுக்கு பட்டம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை இணைய முகவரி வழியே வருகிற 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். பட்டமளிப்பு நடைபெறும் நாள், நேரம், இடம் குறித்து பல்கலை. சாா்பில் பின்னா் அறிவிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






