வத்தலகுண்டில் பாலியல் தொழில் நடத்திய 3 போ் மீது வழக்கு
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் ஆயுா்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்த பெண் உள்பட 3 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் ஆயுா்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்த பெண் உள்பட 3 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
வத்தலகுண்டில் அரசு அனுமதியின்றி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆயுா்வேத சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், இந்த மையத்திலல் பாலியல் தொழில் நடைபெறுவதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் கௌதமன் தலைமையில், போலீஸாா் வெள்ளிக்கிழமை அந்த ஆயுா்வேத சிகிச்சை மையத்தில் சோதனையிட்டனா். அப்போது, அங்கு பாலியல் தொழில் நடைபெற்றது தெரியவந்தது. பின்னா், அங்கிருந்த மதுரை, கோவையைச் சோ்ந்த 2 இளம்பெண்களை போலீஸாா் மீட்டு, அவா்களது பெற்றோா்களிடம் ஒப்படைத்தனா்.
பின்னா், பாலியல் தொழில் நடத்திய கும்பகோணத்தைச் சோ்ந்த கோபிநாத் (35), திருச்சியைச் சோ்ந்த சுகாமணி என்ற சரிதா (35), கட்டட உரிமையாளா் வத்தலகுண்டைச் சோ்ந்த செல்வராஜ் ஆகிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






