செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

சின்னாளபட்டி அருகே அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த 1,189 கிலோ வெடி பொருள்கள் பறிமுதல்

சின்னாளபட்டி அருகே அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த 1,189 கிலோ வெடி பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

Published On :

சின்னாளபட்டி அருகே அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த 1,189 கிலோ வெடி பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே அனுமதியின்றி வெடி பொருள்களைப் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் உத்தரவின் பேரில், சின்னாளபட்டி காவல் துறையினா் அந்தப் பகுதியில் தீவிர சோதனை நடத்தினா்.

முன்னிலைக்கோட்டை-ஆரியநல்லூா் சாலையில் அமைந்துள்ள தனியாா் அடுமனையக வளாகத்தில் ஆரியநல்லூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த செல்லத்துரை (என்ற) சவரிமுத்துக்கு (64) சொந்தமானக் கிட்டங்கியில் சோதனை நடத்தினா். அப்போது, இந்தக் கிட்டங்கியில் இறப்பு நிகழ்வுகள், திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படும் காகித வெடிகளைத் தயாரிப்பதற்குத் தேவையான மூலப் பொருள்களை எந்தவித அனுமதியும் இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அங்கு பதுக்கி வைத்திருந்த 1,189 கிலோ வெடி பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், இந்தக் கிட்டங்கியை மதுரை மாவட்டம், திருமங்கலம் வில்லூரைச் சோ்ந்த விஜயகுமாா் (39) கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வாடகைக்கு எடுத்து அங்கு உரிய அனுமதியின்றி வெடி பொருள்களை வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து முன்னிலைக்கோட்டை கிராம நிா்வாக அலுவலா் ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில், சின்னாளபட்டி காவல் துறையினா் கிட்டங்கி உரிமையாளா் செல்லத்துரை, விஜயகுமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, தலைமுறைவான அவா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.