47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆதீன மடத்துக்குள் நுழைய மாட்டேன்

மதுரை ஆதீன மடத்துக்குள் நுழையமாட்டேன் என ஆதீனம் தொடர்ந்த  வழக்கில் நித்யானந்த பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 8:06 pm

தினமணி

 மதுரை ஆதீன மடத்துக்குள் நுழையமாட்டேன் என ஆதீனம் தொடர்ந்த  வழக்கில் நித்யானந்த பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 நித்யானந்தருடன், மதுரை ஆதீனம் இணைந்து நடத்திய அறக்கட்டளை பதிவு ரத்து தொடர்பாக, மதுரை முதலாவது சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

 இதுதொடர்பாக, சார்பதிவாளருக்கு உத்தரவிடக் கோரி மதுரை ஆதீனம் இவ்வழக்கை தொடர்ந்தார்.

 இவ்வழக்கு விசாரிக்கப்பட்டபோது, ஆதீனம் தரப்பில் இடைக்கால மனு ஒன்றும்  தாக்கல் செய்யப்பட்டது. அதில், மதுரை ஆதீனத்தில் இருந்து நித்யானந்தாவை நீக்கி விட்ட பின்பு கொலை மிரட்டல் வருவதால், நித்யானந்தாவும், அவரது ஆதரவாளர்களும் மதுரை ஆதீன மடத்துக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

 இந்த மனுவுக்கு நித்யானந்த தரப்பில் பதில் தெரிவிக்க அவகாசம் கோரப்பட்டு வந்த நிலையில், அவரது தரப்பில் சனிக்கிழமை மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

 அதில், நித்யானந்த கூறியிருப்பது:

 என்னை இளைய ஆதீனமாக நியமித்தது மரபுப்படி சரியானதுதான். இருந்தாலும் மதுரை ஆதீன மடத்துக்கு நானும், எனது ஆதரவாளர்களும்  நுழைய மாட்டோம். எந்த தொந்தரவும் எங்களால் ஏற்படாது.

  எனவே மதுரை ஆதீனத்தின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

  இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி குருவையா ஆதீனம் தரப்புக்கு உத்தரவிட்டு, வரும் 8-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.