உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

80 மாணவ விஞ்ஞானிகளுக்கு பயிற்சி முகாம்

   மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சார்ந்த அரசு பள்ளிகளில் இருந்து அறிவியல் பாடங்களில் முதலிடம் பிடித்த 80 மாணவ, மாணவியருக்கு, மதுரை தியாகராசர் கல்லூரி வளாகத்தில் இளம் விஞ்ஞானிகள் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.

Updated On :13 மே 2013, 12:05 am IST

   மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சார்ந்த அரசு பள்ளிகளில் இருந்து அறிவியல் பாடங்களில் முதலிடம் பிடித்த 80 மாணவ, மாணவியருக்கு, மதுரை தியாகராசர் கல்லூரி வளாகத்தில் இளம் விஞ்ஞானிகள் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.

  மே 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த முகாமின் துவக்க விழாவுக்கு, கல்லூரி முதல்வர் தாமரைச்செல்வன் தலைமை வகித்தார். முகாமை துவக்கி வைத்து, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் குமரகுரு பேசியது:

  முன்பெல்லாம் பி.ஏ. பொருளாதாரம், வரலாறு, ஆங்கில மொழி கற்றவர்களுக்கு சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து இருந்தது. வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை கிடைத்து வந்தது. இந்தப் பட்டம் பெற்றவர்கள்தான் பெரும்பாலும் ஐ.ஏ.எஸ். தேர்வுகளில் தேர்ச்சி பெற்று நிர்வாகப் பணிகளில் அமர்ந்து வந்தனர்.

  மேலும், பல்வேறு துறைகளிலும் இந்தப் பட்டம் பெற்றவர்கள்தான் முத்திரை பதித்தனர்.

  இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது, பூச்சிக் கொல்லி மருந்து தேவைப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் தான் ஏராளமான ரசாயனப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. போரில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, அதிக அளவில் மருந்துகள் தேவைப்பட்டன.

  காயம் எளிதாகக் குணமடையக் கூடிய வகையிலான மருந்துகள் ஆரஞ்சு பழத்தில் இருப்பது அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது.

  அதேபோன்று, முந்தைய காலங்களில் கல்லூரி, பள்ளிகள் போதுமானதாக இல்லை. அந்தக் காலக்கட்டங்களில் சுயமுயற்சியில், சொந்தப் பணத்தை செலவு செய்து, விஞ்ஞானிகள் பல்வேறு அரிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்தனர். இந்த வகையில்தான் ஆக்சிஜன், நைட்ரஜன், ரேடியம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன.

  தற்போது, விஞ்ஞான வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. ஏராளமான பல்கலைக்கழகங்கள், ஆயிரக்கணக்கான கல்லூரிகள், பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவியரின் ஆராய்ச்சிக்கு அரசு தாராளமாக நிதியுதவிகளை செய்து வருகின்றன.

  திறமையான மாணவ, மாணவியரைக் கண்டுபிடித்து, அவர்களது ஆராய்ச்சிக்கு அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றது. விஞ்ஞான வளர்ச்சியை ஊக்குவிப்பதில் அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. இந்த வாய்ப்பை அனைத்து மாணவ, மாணவியரும் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

  குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் அரசு அளிக்கும் ஊக்கத்தைப் பயன்படுத்தி தலைசிறந்த விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும், என்றார்.

  தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் சார்பில் நடைபெறும் இம்முகாம் மே 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு 9 ஆம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் முதலிடம் பெற்ற இந்த மாணவர்களுக்கு, ஏற்கெனவே முதல்கட்ட பயிற்சி முகாம் அளிக்கப்பட்டுள்ளது.

 தற்போது, இம்முகாமில் தினமும் தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் தொடர்பாக தலைசிறந்த பேராசிரியர்கள் மூலம் சர்வதேச அளவிலான தற்போதைய அறிவியல் வளர்ச்சிகள் குறித்து மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்பட இருப்பதாகவும், ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாக திட்ட மாதிரிகள் அமைக்க இருப்பதாகவும், இவை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், முகாம் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.