விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கிரானைட் முறைகேடு வழக்குகள் விசாரணை தள்ளிவைப்பு

பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தினர் மீதான கிரானைட் முறைகேடு வழக்குகளின் விசாரணைகளை,  நவம்பர் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து மேலூர் நீதித்துறை நடுவர் மன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 2:54 am

DIN

பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தினர் மீதான கிரானைட் முறைகேடு வழக்குகளின் விசாரணைகளை,  நவம்பர் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து மேலூர் நீதித்துறை நடுவர் மன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தினர் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் பதுக்கிவைத்துள்ள பல்லாயிரம் கோடி ரூபாய்  மதிப்புள்ள கிரானைட் கற்களை அரசுடைமையாக்க அனுமதி கோரி, மதுரைமாவட்ட முன்னாள் ஆட்சியர் இல. சுப்பிரமணியன் 47 வழக்குகள் தாக்கல் செய்திருந்தார். இவை தவிர, கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக கீழவளவு, மேலூர், ஒத்தக்கடை காவல் நிலைய போலீஸார் தாக்கல் செய்திருந்த 18 வழக்குகளும் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன.
மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்துக்கு கடந்த 6 மாதங்களாக நிரந்தரமாக மாஜிஸ்திரேட் நியமிக்கப்படவில்லை. இதனால், வழக்குகள் மீதான விசாரணை தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. புதன்கிழமை விசாரணைக்கு வந்த வழக்குகளையும், நவம்பர் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.