2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ப.சிதம்பரத்தின் காஷ்மீர் கருத்தானது வள்ளுவர் கொள்கைக்கு எதிரானது: பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் தருண்விஜய்

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப. சிதம்பரத்தின் காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்படவேண்டும் என்ற கருத்தானது, திருவள்ளுவர் கொள்கைக்கு

News image
Updated On :2 நவம்பர் 2017, 2:52 am

DIN

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப. சிதம்பரத்தின் காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்படவேண்டும் என்ற கருத்தானது, திருவள்ளுவர் கொள்கைக்கு எதிரானது என,  மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான தருண்விஜய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, மதுரை சொக்கிகுளத்தில் உள்ள பாஜக மக்களவைத் தொகுதி அலுவலகத்தில் செய்தியாளர்களிடையே அவர் புதன்கிழமை மேலும் கூறியதாவது:
சிபிஎஸ்சிஇ பள்ளிகளில் திருக்குறள் கற்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். திருக்குறள் இல்லாமல் இந்திய கல்வியும், தேசிய ஒருமைப்பாடும் நிறைவுபெறாது.
ஏற்கெனவே, கன்னியாகுமரியிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்துக்கு திருவள்ளுவரின் திருக்குறள் பயணம் நடத்தப்பட்ட நிலையில், 2018 ஆம் ஆண்டில் இரண்டாம் கட்டமாக, மதுரையிலிருந்து காசிக்கு சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு திருக்குறள் பயணம் நடைபெறவுள்ளது. இதில், அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கவேண்டும்.  
சிவபெருமான் முதல் தலைவராக விளங்கிய தமிழ்ச் சங்கம் அமைத்த மதுரையிலிருந்து, இங்கு அரங்கேற்றப்பட்ட திருக்குறள் பயணத்தை, சிவனின் நகரான காசி வரை நடத்துவது பொருத்தமாகும்.  இப்பயணத்துக்கு பிரதமர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  தேசப்~ஐ ~ஐபாதுகாப்பு, தேசிய ஒற்றுமையை திருவள்ளுவர் தமது திருக்குறளில் வலியுறுத்தியுள்ளார். ஆனால்,  காங்கிரஸ் தலைவரான ப. சிதம்பரம் காஷ்மீருக்கு கூடுதல் அந்தஸ்து தரப்படவேண்டும் என்கிறார். அவரது கருத்தானது, திருவள்ளுவரின் கொள்கைக்கும், திருக்குறள் கருத்துக்கும் எதிரானதாகும்.
காஷ்மீரின் ஒரு பகுதியை ஏற்கெனவே பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. தற்போது உருது மொழியே மாநில மொழியாகவும், சிறப்பு அந்தஸ்து பெற்றதாகவும் காஷ்மீர் உள்ளது. காஷ்மீரைக் காக்க தமிழகம், கர்நாடகம், கேரளம் என அனைத்து மாநில ராணுவ வீரர்களும் தங்களது உயிரைக் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், ப. சிதம்பரத்தின் கருத்தானது ராணுவ வீரர்களின் தியாகத்தை இழிவுபடுத்துவதாக உள்ளது.
 வட இந்தியாவில் உள்ளஅனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் திருக்குறள் கற்பிக்கப்படவேண்டும். காஷ்மீர் மாநில பல்கலைக்கழகத்தில் எனது முயற்சியால் திருக்குறள் கற்பிக்கப்படுகிறது.  நாட்டின் அமைதி, ஒற்றுமைக்கு அடையாளமாக திருக்குறள் உள்ளது. எனவே, வைகை கரையிலிருந்து கங்கைக்கு செல்லும் திருக்குறள் பயணத்தை வெற்றிகரமாக்க தமிழர்கள் முன்வரவேண்டும் என்றார்.
பாஜக மதுரை மக்களவைத் தொகுதி அலுவலகத்துக்கு வந்த முன்னாள் எம்.பி.  தருண் விஜயை பாஜக மாநிலச் செயலர் ஆர். ஸ்ரீநிவாசன்,  மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் சசிராமன்,  பாஜக அறிஞரமைப்பைச் சேர்ந்த சாஸ்திரி மலாடி மற்றும் மகளிரணி சுனிதாமலாடி ஆகியோர் வரவேற்றனர்.  
பாஜக அலுவலகத்தில் மக்கள் பொருளாதாரம் கொள்கை விளக்க அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் தருண் விஜய் பங்கேற்றுப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.