பேராசிரியையை கத்தியால் குத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையை கத்தியால் குத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையை கத்தியால் குத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் பேராசிரியையயாக பணிபுரிந்து வருபவர் ஜெனிபா (39). இவரது துறையில் தாற்காலிக விரிவுரையாளராகப் பணிபுரிந்த ஜோதிமுருகன் (32), முன்விரோதம் காரணமாக ஜெனிபாவை அண்மையில் கத்தியால் குத்தினார். இதுதொடர்பாக நாகமலைபுதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜோதிமுருகனை கைது செய்தனர். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜோதிமுருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஊரகக்கண்காணிப்பாளர் மணிவண்ணன் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ஆட்சியர் உத்தரவின் பேரில் போலீஸார் ஜோதிமுருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...