அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சபரிமலையில் 24 மணி நேர சேவை: ஐயப்பா சேவா சங்கம் ஏற்பாடு

சபரிமலையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ உதவிகள்தொடர்பான 24 மணி நேர சேவையில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினர்ஈடுபட உள்ளனர்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:35 am

DIN

சபரிமலையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ உதவிகள்தொடர்பான 24 மணி நேர சேவையில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினர்ஈடுபட உள்ளனர்.
இது தொடர்பாக இச்சங்கத்தின்மாநிலத் தலைவர் மு.விஸ்வநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சங்க உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சபரிமலை மண்டல, மகரவிளக்கு உற்சவ காலங்களில் பக்தர்களுக்கு சேவை செய்ய உள்ளனர்.
அதன்படி பம்பை முதல் சன்னிதானம் வரை முகாம்களில் சுக்கு நீர் வழங்குதல், இலவச மருத்துவ உதவி, ஸ்ட்ரெச்சர் சேவை, ஆக்ஸிஜன் பார்லரில் பணியாற்றுதல், துப்புரவுப் பணி ஆகியவை மேற்கொள்ளப்படும்.
 பக்தர்களுக்காக 20 ஆக்ஸிஜன் பார்லர்கள் உள்ளன. அவற்றில்ஐயப்ப சேவா சங்கத்தினர் பணிபுரிவர்.
மேலும் பக்தர்கள் மலையேறும் போது ஏற்படும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புக்கு உதவும் வகையில் ஸ்ட்ரெச்சர்களுடன் அவசரப்பிரிவு தொண்டர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள்.
 சென்னை,மதுரை, வேலூர், திருச்சி, கன்னியாகுமரி, தேனி, வீரபாண்டி ஆகிய 14 இடங்களில் அகில பாரத ஐயப்ப சேவா சங்க முகாம்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழிகாட்டுதல், குடிநீர் வழங்குதல்,மற்றும் மருத்துவ உதவிகளைமேற்கொள்வர்.
எருமேலி, அழுதா, கரிமலை, பெரியாணவட்டம், பம்பா, நிலக்கல், அப்பாச்சி மேடு, மரக்கூட்டம் ஆகிய இடங்களில் உள்ள முகாம்களில் 3 ஆயிரம் தொண்டர்கள் சுழற்ச்சி முறையில் பணியில் ஈடுபடுவர்.
 பந்தனம் திட்ட ஆட்சியர் மற்றும் சபரிமலை துப்புரவுப் பணி கழகத்தலைவர் வேண்டுகோளின்படிநிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில்800 சேவா சங்க உறுப்பினர்கள்தூய்மைப் பணியில்ஈடுபடுவர்.
கோட்டயம் ஆட்சியர் வேண்டுகோளின்படி எரிமேலியில் 125 சேவா சங்க உறுப்பினர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபடுவர்.
 மதுரை அப்போலோ மருத்துவமனை தீவிர இருதய சிகிச்சைப் பிரிவினருடன் இணைந்து மருத்துவ சேவை நடைபெறும்.
மேலும் நிலக்கல்லில் மைடிவிஎஸ், மகேந்திரா நிறுவனம் சார்பில் வாகன இலவச பராமரிப்புப் பணியிலும் சேவா சங்கத்தினர் ஈடுபடுவர் எனக்குறிப்பிட்டுள்ளார்.
மாலை அணிவிப்பு: கார்த்திகை மாதம்முதல் தேதியில் (நவ.17) ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குவர். அன்றிலிருந்தே சபரிமலைக்கும் பக்தர்கள் அதிகமாகச் செல்லத் தொடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.