மதுரையில் பூட்டிய வீட்டில் 13 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
மதுரை விராட்டிபத்து மலையாள நகரைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (76). இவர் கரூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு மார்ச் 13-ஆம் தேதி சென்றுவிட்டார். அங்கிருந்து செவ்வாய்க்கிழமை இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 13 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இச்சம்பவம் தொடர்பாக சோமசுந்தரம் அளித்த புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







