மதுரையில் எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன.
இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் கி.த. ராஜகுமார் கூறியதாவது: பள்ளிகளின் கோடை விடுமுறையை முன்னிட்டு, மதுரை எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் (ரேஸ் கோர்ஸ்) உள்ள நீச்சல் குளத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், 8 வயது முதல் சிறுவர், சிறுமியர் அனைவரும் பங்கேற்கலாம். பயிற்சி வகுப்புகள் 13 நாள்களாக நடத்தப்படவுள்ளன. இதற்கு கட்டணமாக ரூ.1500 வசூலிக்கப்படுகிறது.
காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெறும் இப் பயிற்சி வகுப்பில், சிறப்பு பயிற்சியாளர்களால் நீச்சல் கற்றுத் தரப்படுகிறது என்றார்.
மாநகராட்சி நீச்சல் குளம்: உலகத் தமிழ் சங்கம் அருகேயுள்ள மதுரை மாநகராட்சி நீச்சல் குளம் தனியார் பராமரிப்பின் கீழ் உள்ளது.
இங்கு, கோடை கால நீச்சல் பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன. கட்டண அடிப்படையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நீச்சல் பயிற்சியில் சேர்க்கப்பட உள்ளதாக, மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
ஹாக்கி போட்டிகள்: மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள், மதுரையில் ஓரிரு வாரங்களில் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், கரூர் ஆகிய மாவட்ட அணிகள் பங்கேற்கவுள்ளன.
எனவே, ஹாக்கி மைதானங்கள் சீரமைக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்த் தேசியப் போராளி செல்லப்பா மறைவுக்கு அஞ்சலி

அரசு பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
மனைவி, உறவினா்களை அரிவாளால் வெட்டிய கணவா் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

